மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! இயக்குனர் சேரனா இது! அசத்தலான நியூ லுக்கில் ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே! வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். அதனைத் தொடர்ந்து அவர் பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட ஏராளமான வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமன்றி பல ஹிட் திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சேரன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வெகு நாட்கள் இருந்தார். அப்பொழுது அவர் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை ஒரு தந்தை போல வழிநடத்தி வந்தார்.
#NewProfilePic pic.twitter.com/8KB9ijF3v2
— Cheran (@directorcheran) October 12, 2020
அதனைத் தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வீட்டில் முடங்கியிருந்த இயக்குனர் சேரன் சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது நன்கு முடிவளர்த்து, தாடி வைத்து செம ஸ்டைலாக ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது பெருமளவில் வைரலாகி வருகிறது.