பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
கார்த்தியும், சூர்யாவும்... இயக்குனர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குனர் சேரன்.! வைரலாகும் பதிவு!!
பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சமுத்திரக்கனி, நடிகர் பொன்வண்ணன், சசிகுமார் உள்ளிட்ட பலரும் ஞானவேல் ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீரிடம் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார். தற்போது இயக்குனர் அமீருக்கு ஆதரவாக இயக்குனரும், நடிகருமான சேரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
@StudioGreen2 #Gnanavelraja படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள்
— Cheran (@directorcheran) November 30, 2023
அமீரின் நேர்மையையும், உண்மையும், நாணயமும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. கண்டிக்கிறேன் உங்களை. கார்த்தியும் சூர்யாவும் உங்களை இந்நேரம் உம் தவறை கண்டித்திருக்கவேண்டும்.
அதில் அவர், “அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு.... காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே.. திமிராய் இரு.. நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும்.. உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும்” என்றுள்ளார்.
மேலும் “படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள். அமீரின் நேர்மையையும், உண்மையும், நாணயமும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. கண்டிக்கிறேன் உங்களை. கார்த்தியும் சூர்யாவும் உங்களை இந்நேரம் உம் தவறை கண்டித்திருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.