மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் ராதாரவிக்கு எதிராக களமிறங்கும் பாடகி சின்மயி! தீவிரமாகும் மோதல்! வெளியான அதிரடி தகவல்கள்!
திரைதுறை மட்டுமின்றி அனைத்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் பாடகி சின்மயி. மேலும் அவர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறியதன் மூலம் மேலும் பிரபலமானார். சின்மயின் இந்த குற்றச்சாட்டிற்கு எதிராகவும், ஆதரவாகவுமே பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த மீடூ விவகாரத்தில் சின்மயியை அப்பொழுது டப்பிங் சங்கத்தின் தலைவராக இருந்த ராதாரவி கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் சின்மயி சங்க விதிகளை மீறி செயல்பட்டதாகவும், சந்தா செலுத்தவில்லை எனவும் கூறி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தை நாடி போராடி மீண்டும் உறுப்பினரானார்.
இந்நிலையில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் பிப்ரவரி 15 அன்று நடைபெறஉள்ளது. இதில் மீண்டும் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து ராமராஜ்யம் என்ற பெயரில் பாடகி சின்மயி களமிறங்கியுள்ளார். மேலும் அதற்காக இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.