96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடேங்கப்பா! நகைச்சுவை நடிகர் செந்திலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நடிகர்களாக கலக்குபவர்கள் யோகி பாபு, சூரி போன்றோர். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்கள் என்றால் அது நம் கவுண்டமணியும் செந்திலும்தான்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்று வரை மிகவும் பிரபலம். அதில் ஒன்றுதான் வாழைப்பழ காமெடி மற்றும் சொப்பன சுந்தரி. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தாலும் சரி, தனித்தனியாக நடித்தாலும் சரி அந்த படம் செம ஹிட் ஆவது உறுதி.
1951-ம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்சம்பூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் நடிகர் செந்தில். இவரது மனைவி பெயர் கலைச்செல்வி. இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவரின் முதல் மகன் மணிகண்டபிரபு டாக்டராக இருக்கிறார். இரண்டாவது மகன் ஹேமசந்திரபிரபு சினிமாவில் நடிக்க முயற்சித்து வருகிறார். செந்தில் ஆரம்பத்தில் ஹோட்டல் வெயிட்டராகவும் வைன்ஷாப்பிலும் வேலை செய்து இருக்கிறார். சில நாடக மேடைகளில் திறமையை காட்டி சினிமாவில் நுழைந்தார்.
இவர் ஆரம்பத்தில் சினிமாவில் 5- ரூபாயும், 100 ரூபாயும் சம்பளமாக வாங்கி கொண்டு இருந்தார். இவர் காமெடி ஃபேமஸ் அடைய அடைய நிறைய படங்களில் ஒப்பந்தமாகி ஆயிரக் கணக்கில் சம்பளம் வாங்கினார். இப்போது இவர் ஒரு படத்திற்கு 25 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார். இவருக்கு சொந்தமாக சென்னையில் ஒரு பெரிய வீடு இருக்கிறது. இந்த வீட்டின் மதிப்பு 10 கோடி ரூபாயில் இருந்து 15 கோடி ரூபாய் வரை இருக்கும்.
இவரிடம் இருக்கும் சொகுசு கார் ஆடி A4. இதன் மதிப்பு சுமார் 40 லட்சம். மேலும் இவரிடம் இருக்கும் ஸ்க்ரோடா ஆக்டோவியா காரின் மதிப்பு 18 லட்சம். ஒரு டொயோட்டா இநோவா காரும் வைத்து உள்ளார். இதன் மதிப்பு 16 லட்சம். நடிகர் செந்தில் திரைப்படங்களில் மட்டுமே நடித்து சம்பாதித்து உள்ளார். இவரின் சொத்துகள் அனைத்தையும் சேர்த்து பார்த்தால் சுமார் 40 கோடியில் இருந்து 50 கோடி வரை இருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகின்றன. ஆனால் இதெல்லாம் உண்மையா இல்லையா என்று செந்தில் அவர்கள்தான் கூற வேண்டும்.