மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி அதகளம்தான்.! பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள 20 போட்டியாளர்கள் இவர்கள்தான்.! முழு விவரம் இதோ..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருந்த பிக்பாஸ் 6வது சீசன் நேற்று முதல் பிரம்மாண்டமாக ஆரம்பமானது. இந்த சீசனையும் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கவுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது என அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதாக பல பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு வந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள போட்டியாளர்கள் யார் யார் என பார்க்கலாம். பிக்பாஸ் சீசன் 6 வீட்டிற்குள் முதல் ஆளாக சமூக வலைதளங்களில் பிரபலமான ஜி.பி முத்து, அவரைத் தொடர்ந்து தனது இளம் வயதிலேயே பெருமளவில் பிரபலமடைந்த பாப் பாடகர் அசல், திருநங்கை மாடலான ஷிவின் கணேஷ், சின்னத்திரை நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, பிரபல மாடல் நடிகை ஷெரினா, சீரியல் நடிகரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனுமான மணிகண்டன், சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரக்ஷிதா, கிரிக்கெட் பிளேயர் மற்றும் மாடலிங் துறையை சேர்ந்த ராம் ராமசாமி,ராப் பாடகர் ADK ஆகியோரும் பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர்.
அவர்களைத் தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த ஜனனி, நடன இயக்குனரும், சின்னத்திரை நடிகையுமான சாந்தி, பத்திரிக்கையாளர் விக்ரமன், விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமான அமுதவாணன், தொகுப்பாளினி மகேஸ்வரி, பிரபல தொலைக்காட்சியின் விஜே கதிரவன், சீரியல் நடிகை குயின்சி, சிங்கப்பூரைச் சேர்ந்த மாடலிங் துறையை சேர்ந்த நிவா, மற்றும் தனலட்சுமி என மொத்தம் 20 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.