"நித்யா மேனன் இதனால் தான் திருமணம் செய்துகொள்ளவில்லை" ப்கீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்.!



Controversial news about actress nithya menon

பெங்களூரில் ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர் நித்யா மேனன். இவர் தமிழில் "180" என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து வெப்பம், மாலினி 22, பாளையங்கோட்டை , ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி உள்ளிட்ட பட படங்களில் நடித்துள்ளார்.

bayilvan

இவரது சினிமா வாழ்க்கையில் ஓ காதல் கண்மணி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் இவருக்குப் பெயரை பெற்றுத் தந்தன. அதிலும் திருச்சிற்றம்பலம் படத்தில் இவரின் ஷோபனா கேரக்டர் மிகவும் விரும்பப்படுவதாக இன்றளவும் உள்ளது.

இந்நிலையில்  நித்ய மேனன் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, " நித்யா மேனன்  35 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம், வரதட்சணை கொடுமை காரணமாக கேரள நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது தான்.

bayilvan

அந்த நிலை தனக்கும் நேருமோ என்று நித்ய மேனன் பயப்படுகிறார். மேலும் மற்ற கதாநாயகிகளை போல் மெலிந்த உடல்வாகு தனக்கு இல்லாமல், அதிக உடல் எடையுடன் இருப்பதாலும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.