மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வடிவேலுவை தொடர்ந்து கவுண்டமணியும் இப்படியா.. அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கும் காமெடி நடிகர்கள் .?
தமிழ் திரைத்துறையில் மிகப்பெரும் காமெடி ஜாம்பவான்களாக 80களின் காலகட்டத்தில் தொடங்கி 2000 ஆண்டு வரை கொடி கட்டி பறந்தவர்கள் தான் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற காமெடி நட்சத்திரங்கள்.
இவர்களின் காமெடி காட்சிகள் திரைப்படங்களில் இருப்பதாலேயே பல திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. இவ்வாறு திரைத்துறையில் உச்சத்திலிருந்த வடிவேலுவின் மீது அவருடன் இருந்த நடிகர், நடிகைகள் "வடிவேலு யாரையும் வளர விடமாட்டார்" எனும் குற்றச்சாட்டை எழுப்பினர். தற்போது கவுண்டமணியின் மீதும் பிரபலநடிகை விசித்ரா குற்றம் சாட்டியிருக்கிறார்.
குக் வித் கோமாளியின் மூலம் பிரபலமான நடிகை விசித்ரா, கவுண்டமணியுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் குணசித்திர நடிகையான விசித்ரா கவுண்டமணியால் பட வாய்ப்புகள் பறிபோனது என்று தற்போது பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரளித்த பேட்டியில், "நடிகர் பிரபுவின் படம் ஒன்றில் நானும் கவுண்டமணியும் கமிட்டாகி இருந்தோம். அந்த படப்பிடிப்பின் போது நான் அவரை கவனிக்கவில்லை. ஆனால் நான் வணக்கம் சொல்லவில்லை என்று பெரிய பிரச்சினையை கிளப்பி விட்டார். இதன் பின்பு கே எஸ் ரவிக்குமார் சார் தான் சமாதானம் பேசி அவரிடன் வணக்கம் கூற வைத்து பிரச்சனையை முடித்து வைத்தார். மேலும், அப்போது கவுண்டமணி சார் என்னை பற்றி தவறாக பேசியிருந்தார் என்பது பின்பு தான் எனக்கு தெரிய வந்தது" என்று கூறியுள்ளார்