மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பாலியல் வழக்கில் கைதான புஷ்பா பட நடிகரை பணம் கொடுத்து வெளியில் எடுத்த படக்குழு!" அதிர்ச்சியில் ரசிகர்கள்..
2019ம் ஆண்டு "மல்லேஷம்" என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி. 2021ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடித்த "புஷ்பா எழுச்சி" படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். மேலும் இந்தப் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தென்னிந்திய விருதினை வென்றுள்ளார்.
தற்போது "புஷ்பா " படத்திலும் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி நடித்து வருகிறார். முன்னதாக புஷ்பா முதல் பாகத்தில் இவர் அல்லு அர்ஜுனுக்கு நண்பனாக ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி பாலியல் வழக்கில் கைதாகியுள்ளார்.
முன்னதாக துணை நடிகை ஒருவர் வேறு நபருடன் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்த ஜெகதீஷ், அந்த நடிகையை மிரட்டி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த நடிகை, தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜெகதீஷ் சிறை சென்றுவிட்டதால், புஷ்பா 2 படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டூப் போட்டு ஜெகதீஷின் காட்சிகளை படமாக்கினால், ஒட்டுமொத்த படப்பிடிப்பும் பாதிக்கப்படும் என்று கூறி 20 லட்சம் பிணையத் தொகையாக கொடுத்து படக்குழு அவரை ஜாமீனில் எடுத்துள்ளது.