மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓ.. உங்க அடுத்த பிளான் இதுதானா! ரசிகரின் கேள்விக்கு, குக் வித் கோமாளி பவித்ராவின் பதிலை பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்து ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் பவித்ரா லட்சுமி. போட்டியாளராக கலந்து கொண்ட இவர் கோமாளியான புகழுடன் சேர்ந்து செய்யும் அட்ராசிட்டிகள் அனைவரையும் சிரிக்க வைத்தது.
பவித்ரா லட்சுமி இதற்குமுன் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. பவித்ரா ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் அவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர் உங்களது அடுத்த பிளான் என்ன? உங்களது படங்களை பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார். இதற்கு பவித்ரா, நான் தற்போது ஒரு தமிழ் படம் மற்றும் ஒரு இருமொழி படத்தில் நடித்து வருகிறேன். விரைவில் மேலும் சில படங்கள் குறித்த நல்ல அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.