பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குக் வித் கோமாளியில் இசைபுயல்! அடேங்கப்பா...என்னம்மா கலாய்க்குறாரு பார்த்தீர்களா!! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ட்ரெண்டிங்கில் இருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. செம ஜாலியாக சென்ற இந்நிகழ்ச்சி தற்போது இறுதி நிலைக்கு வந்துள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களான பாபா பாஸ்கர், பவித்ரா, கனி, அஸ்வின், ஷகீலா ஆகியோர் இறுதி நிலைக்கு தகுதியாகியுள்ளனர். மேலும் ஷிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, சுனிதா, சரத் ஆகியோர் பெரும் ரகளைகள் செய்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளி இறுதி நிகழ்ச்சிகள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு தொலைகாட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டு செம ரகளைகள் செய்துள்ளார். அவர் மட்டுமின்றி பல பிரபலங்கள் நேரில் வந்தும், வீடியோ கால் மூலமாகவும் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் வீடியோ காலில் வந்து அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார். அப்பொழுது அவர் கனியிடம் பைனல்ஸ்ல கூட கார குழம்புதான் வைக்க போகிறீர்களா? என கிண்டலாக கேட்டுள்ளார். மேலும் நடுவில் தங்கதுரை ஒரு ஜோக் சொல்கிறேன் என்று சொன்னதும் பாய் என கூறி கலாய்துள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.