மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம மாஸ்தான்.. ஹீரோவாகும் சதீஷ்க்கு ஜோடியாகும் நம்ம குக் வித் கோமாளி 2 பிரபலம்! வாழ்த்திய பிரபல கிரிக்கெட் வீரர்!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சதீஷ். முன்னணி காமெடி நடிகராக விளங்கி வந்த நடிகர் சதீஷ் தற்போது ஹீரோவாக அவதாரமெடுக்கவுள்ளார்.
அதாவது நடிகர் சதீஷ் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான பவித்ரா நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை நேற்று நல்ல முறையாக நடைபெற்றது. அத்தகைய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
— Natarajan (@Natarajan_91) April 7, 2021
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் சிங் நடராஜன் நடிகர் சதீஷ்க்கு வாழ்த்துக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சில பட பூஜையின் புகைப்படத்துடன், உங்களது புதிய படத்திற்கு வாழ்த்துக்கள் சதீஷ் அண்ணா என்ன பதிவிட்டுள்ளார்.