மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாம் போச்சு.. கண்காணாத இடத்துக்கு போறேன்.! எமோஷனலாக வீடியோ வெளியிட்ட குக் வித் கோமாளி சக்தி.! ஏன்? என்னாச்சு?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஏராளம். அவ்வாறு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தற்போது பலரும் பிரபலமாக உள்ளனர். நிகழ்ச்சியில் கோமாளியாக அவ்வப்போது பங்கேற்று பலரையும் சிரிக்க வைத்தவர் சக்தி. ஆனால் அவரால் புகழ், ஷிவாங்கி, பாலா ஆகியோர் அளவிற்கு பிரபலமாக முடியவில்லை.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சக்தி லைவ்வில் வந்து பேசியுள்ளார். அந்த வீடியோவில் கையில் அடிபட்டு கட்டுடன் இருக்கும் அவர், ஹாய் நான் சின்ன பிரேக் எடுத்துக்கப் போறேன், பிஸிகலாக, மென்டலாக மனதிற்கு ஒரு மாதிரி உள்ளது. நான் இப்போ பழைய சக்தியாக இல்லாத மாதிரி பீல் செய்கிறேன். மீடியாவால் நான் நிறைய விஷயத்தை புரிஞ்சிகிட்டேன். ஆனால் இப்போ எதையும் என்னால் சொல்ல முடியாது.
கொஞ்ச நாளைக்கு கண்காணாத இடத்துக்கு போயிட்டு வரேன். மீடியா கூட நான் வேணும்னு முடிவெடுக்காத விஷயம்தான். எனக்கு ஒரு வேலை கிடைத்தால் கண்டிப்பா அதை செய்ய நான் ரெடியா இருக்கேன். அப்படியொரு வேலை கிடைத்தால் நான் எல்லாத்தையும் விட்டுவிட்டு அங்கு போயிருவேன். சப்போர்ட் செய்ய ஆளுங்க இருந்தாலும், நமக்கு நாமதான் எல்லாத்தையும் பாத்துக்கணும் என்று உருக்கமாக பேசியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சக்திக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசுறீங்க? கையில என்ன கட்டு என கேட்டு ஆறுதல் கூறி வருகின்றனர்.