மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளி சிவாங்கி காதலிக்கிறாரா.? யார் அந்த பிரபலம் தெரியுமா.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் பல பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார். இதனையடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட சிவாங்கி, புகழுடன் இணைந்து பல நகைச்சுவைகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு சிவாங்கி பிரபலமானவராக அறியப்படுகிறார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு குக் வித் கோமாளி அடுத்த பாகத்தில் குக்காக கலந்து கொண்ட சிவாங்கி, தற்போது கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார் சிவாங்கி.
எனவே லைவில் வந்த சிவாங்கி பேசிக் கொண்டிருக்கும்போது இவருடன் தர்ஷனும் லைவில் இணைந்து கொண்டார். அப்போது தர்ஷன் இந்த நாளில் உனது காதலன் யார் என்று சொல்லவும், அப்படி ஒருவரை நான் பார்க்கவில்லை. இந்த வருஷமாவது பார்க்க வேண்டும் என்று சிவாங்கி கூறினார் இந்த லைவ் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.