96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தென்னிந்திய சினிமா வரலாற்றில் ரவுடி பேபி பாடல் புதிய சாதனை; என்ன தெரியுமா?
தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 . மாரி முதல் பாகம் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் மாரி 2 வெளியானது. முதல் பாகம் வெற்றிபெற்ற அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றிபெறவில்லை. முதல் பாகத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மாரி 2 படத்தில் கதாநாயகியான ப்ரேமம் பட புகழ் சாய் பல்லவி நடித்திருந்தார்.
Historical Record In SouthIndian Cinema🔥💥💪#RowdyBaby VideoSong hits 500Million + views, Setting New Records Like a Boss🙏#RowdyBabyHitsHalfBillionViews#500MViewsForRowdyBaby
— Sai Pallavi™ (@SaipallaviFC) June 2, 2019
👉 https://t.co/BSPv1hpcIJ
Congrats @dhanushkraja @Sai_Pallavi92 @wunderbarfilms #SaiPallavi 🖤 pic.twitter.com/9IAXoe7E5L
படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாவிட்டாலும், படத்தில் வந்த ரௌடி பேபி பாடல் உலகளவில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், தனுஷ் பாடல் வரிகளில், தனுஷ், தீ இருவரும் சேர்ந்து ரௌடி பேபி பாடலை பாடினார்கள். தென்னிந்திய சினிமா வரலாற்றில் குறுகிய காலத்தில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் உலக அளவில் அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
#RowdyBaby 500 Million Views@dhanushkraja @Sai_Pallavi92 @thisisysr pic.twitter.com/yRct0Hio4i
— Asura Praveen (@AsuraPraveen3) June 2, 2019
மேலும் ரவுடி பேபி பாடலின் இந்த வெற்றிக்கு இசை, பாடல் வரிகள், பாடல் பாடியவர்கள் என ஒருபக்கம் இருந்தாலும் சாய் பல்லவியின் நடனம்தான் இந்த பாடலின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் எனலாம்.