மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடி-க்கு கிடைத்த அசத்தலான விருது.! என்ன தெரியுமா?? அவரே பகிர்ந்த வீடியோ!!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்தவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இந்நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் அவர் தொடர்ந்து பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெருமளவில் பிரபலமானார். தனித்துவமான தனது பேச்சால், கலகலப்பான தனது சிரிப்பால் அவர் அனைவரையும் கவர்ந்தார்.
டிடி சின்னத்திரை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி வெள்ளித்திரையில் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மூன்று ஆண்டிலேயே பிரிந்தனர். அதனைத் தொடர்ந்தும் அவர் பல மொழி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இந்திளவில் பிரபலமாக உள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது மாடர்னாக, ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது JFW ACHIEVER’S AWARD 2022ற்கான விருதினை பெற்றுள்ளார். அந்த விருதினை கையில் வைத்திருந்த வீடியோவை டிடி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. அவருக்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.