மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மஞ்சகாட்டு மைனாவாக ரசிகர்களை சூடேற்றும் தொகுப்பாளினி... புடவையில் கவர்ச்சி காட்டும் டிடி..!? வைரலாகும் புகைப்படம்...!
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான திவ்யதர்ஷினி மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்காகவே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும் இவர் ஆனந்த விகடனின் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை பெற்றிருக்கிறார்.
திவ்யதர்ஷினியை DD என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். பார்க்கும் ரசிகர்களை மட்டுமல்லாது, இவர் பேட்டி எடுக்கும் பிரபலங்களையும் முகம் சுழிக்கும் அளவிற்கு எந்தவொரு கேள்விகளையும் கேட்க மாட்டார் என்று நம்பிக்கையோடு பிரபலங்கள் இவரது நிகழ்ச்சிக்கு வருவார்கள். பல பிரபல நடிகர், நடிகைகளே இவரை பற்றி பெருமையுடன் தொலைக்காட்சி பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.
மேலும், இவர் திரையுலகிற்கு முதன்முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியான 'சுபயாத்ரா' என்ற மலையாள திரைபடத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து தமிழில் நள தமயந்தி, விசில், சரோஜா, சர்வம் தாளமயம், பவர்பாண்டி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதுபோன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி என்கிற டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார். சமீபத்தில் இவர் மஞ்சள் நிற புடவையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் "மஞ்சகாட்டு மைனா" என்று ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பிறந்த நாளன்று இவர் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.