மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடிக்கு வளைகாப்பு! தீயாய் பரவும் கர்ப்பமான புகைப்படம்!! உண்மை என்ன??
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ஆடியோ வெளியீட்டு விழா, கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். சின்னத்திரையில் சில தொடர்களில் நடித்திருக்கும் அவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தொகுப்பாளினி டிடி ஜோஸ்வா, இமைபோல் காக்க, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் சுந்தர்.சி இயக்கும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ஐஸ்வர்யா, அம்ரிதா, சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் டிடி கர்ப்பமாக இருப்பது போன்றும், வளைகாப்பு நடைபெற்றது போல புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியது. இந்தப் படத்தை நடிகர் விஸ்வநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது வைரலாகி வருகிறது.