மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது!! விஜய் டிவி புகழ் டிடி இரண்டாம் திருமணம் செய்ய உள்ளாரா... அதுவும் மாப்பிள்ளை யார் தெரியுமா.?
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி என்று தான் கூற வேண்டும். எந்த ஒரு பிரபலமும் முகம் சுழிக்கும் வகையில் செயல்படாமல், கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இவர் கில்லாடி.
இதனாலே இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும் இவர் சிறந்த தொகுப்பாளினியாக மட்டுமின்றி சிறந்த நடிகையும் கூட. இவர் நடிப்பில் வெளியான நலதமயந்தி, விசில், பவர் பாண்டி, துருவ நட்சத்திரம், சர்வம் தாளமயம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.இவர் கடந்த 2014 ஆம் வருடம் தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மூன்று வருடங்கள் மட்டுமே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை பின் ஒரு சில கருத்து வேறுபாட்டால் இருவரும் சட்டப்படி பிரிந்து விவாகரத்தும் செய்து கொண்டனர். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பிசியாக இருந்த டிடி தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து சில விசயங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது அவரின் இரண்டாம் திருமணம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது டிடியின் குடும்ப நண்பரான கேரளாவை சேர்ந்த ஒருவரை தான் திருமணம் செய்ய இருக்கிறாராம். நீண்ட நாள் பழகியவர் என்பதால் டிடியும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஆனால் இது குறித்து டிடி மற்றும் குடும்பத்தினர் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.