மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. வாக்கிங் ஸ்டிக்குடன் நடந்து வரும் டிடி! அதுவும் எதற்காக தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. டிடி என செல்லமாக அழைக்கப்படும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, விருது வழங்கும் விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சில படங்களிலும் முக்கிய சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியை தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அவருடன் அர்ச்சனாவும் சேர்ந்து தொகுத்து வழங்கவுள்ளாராம். இந்த நிகழ்ச்சிக்காக டிடி மேடைக்கு வரும்போது வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வந்துள்ளார். அத்தகைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் டிடி நீண்ட காலமாக அவரது காலில் பிரச்சினை இருப்பதால் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.