மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே.. தாய் - தந்தையாகப்போகும் பிரபல சின்னத்திரை ஜோடி.. சிறப்பாக நடந்துமுடிந்த சீமந்தம்.. வைரலாகும் போட்டோஸ்.!!
சின்னத்திரை நெடுந்தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்கள் தீபக் - அபிநவ்யா. இவர்கள் இருவரும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த திருமணம் என்ற சீரியலில் நடித்திருந்தனர். பின் ஜீ தமிழ் ஒளிபரப்பாகிய என்றென்றும் புன்னகை என்ற சீரியல் நடித்திருந்த நிலையில், தீபக் சித்திரம் பேசுதடி சீரியலில் நடித்திருந்தார்.
அதேபோல் அபிநவ்யா சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்து வந்ததை தொடர்ந்து, இருவீட்டார் சம்மதத்துடன் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்தது. சென்னையில் இருக்கும் ஒரு திருமண ஹாலில் இருவருக்கும் திருமணமும் நடைபெற்றது.
இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில், இருவரும் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கினர். இந்நிலையில் தீபக் - அபிநவ்யா மகிழ்ச்சியான செய்தியை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். அதில், "அபிநவ்யா கர்ப்பமாக உள்ளார். எங்கள் குடும்பத்தில் புதியவர் வளர்ந்து கொண்டிருக்கிறார். உங்களின் ஆசீர்வாதம் வேண்டும்" என்று கூறியிருக்கின்றனர்.
அத்துடன் தற்போது அபிநவ்யா கர்ப்பமாகி 9 மாதமாகும் நிலையில், சீமந்த விழாவும் நடைபெற்று இருக்கிறது. இது குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.