மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. செம மாஸ்தான்! ராஜமவுலி படத்தில் இணையும் தீபிகா படுகோனே.! ஹீரோ யார்னு பார்த்தீங்களா.!
தெலுங்கு சினிமாவுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இறுதியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த RRR திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் அசத்தலாக நடித்து இருந்தனர்.
இப்படத்தை தொடர்ந்து ராஜமவுலி மகேஷ்பாபு நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் உலகளாவிய ஆக்ஷன் படமாக, ஹாலிவுட் பட பாணியில் இருக்கும் என செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.