#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விழுந்து விழுந்து சிரித்த தெய்வமகள் சத்யா? என்ன காரணம் தெரியுமா?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் மிகவும் பிரபலமானது தெய்வமகள். இதில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகை வாணி போஜன் நடித்திருப்பார். இவரது கதாபாத்திரம் அந்த நாடகத்தில் மிகவும் பிரபலமானது. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவருக்காகவே இந்த சீரியலை பார்த்த ரசிகர்கள் ஏராளம்.
அதேபோல கதையின் நாயகிக்கு ஈடான புகழ்பெற்றவர் அந்த நாடகத்தில் வில்லியாக நடித்த காயத்ரி அண்ணியார்தான். ஒருவழியாக சில மாதங்களுக்கு முன்பு இந்த தொடர் முடிவுக்கு வந்தது. இதில் கடைசியில் நடந்த கொடுமை என்னவென்றால் கதையின் நாயகன் ப்ரகாஷிற்கு ஒரே இரவில் அமேசான் காடு அவரது முகத்தில் தாடி முலைத்திருக்கும்.
இதுபற்றி கூறிய நடிகை வாணி போஜன் அந்த தாடியை ஒட்டும் போதே படக்குழுவில் உள்ள நாங்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். நாங்கள் அந்த ஒட்டு தாடியை பிரகாசுக்கு ஓட்டும்போதே செம்மையாக சிரித்தோம். கண்டிப்பாக பேஸ்புக்கில் மீம்ஸ் போட்டு பயங்கரமாக கலாய்ப்பார்கள் என்று தெரிந்துதான் செய்தோம் ஏற்று வாணி போஜன் கூறியுள்ளார்.