மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் மகன் சஞ்சய் டைரக்ஷனில் நடிக்க தயார்! எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் துருவ் விக்ரம்!!
தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சீயான் விக்ரமின் மகன் துருவ். முதல் படத்திலேயே இவரது நடிப்பு அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது. அதனை தொடர்ந்து துருவ் தனது அப்பா விக்ரமுடன் இணைந்து மகான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம்
பிப்ரவரி 10 ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தநிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் துருவ் விக்ரம் சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்துள்ளார். , அவர் கூறியதாவது, சிறு வயதிலிருந்தே விஜய் சாருடைய மகன் சஞ்சய் எனது நல்ல நண்பர். அவர் நல்ல கதையுடன் வந்தால், அவரது இயக்கத்தில் நடிக்க தயாராக உள்ளேன். பாலிவுட் மாதிரி இங்கு இரு நாயகர்களின் வாரிசுகள் இணையும் படமாக அது அமையும் என கூறியுள்ளார்.