#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓவியாவின் 90ml படத்திற்கு எழும் விமர்சனங்கள்! என்ன செய்வதென்று புரியாமல் ரசிகர்கள்
தணிக்கை குழுவால் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள 90ml படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ஓவியா நடித்துள்ள இந்த படத்தினை அனிதா உதீப் இயக்கியுள்ளார்.
18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் என துவங்கும் பட்த்தின் ட்ரெய்லரை பார்த்த ஓவியா ரசிகர்கள் குமுறிக் கொண்டுள்ளனர். இதற்கு காரணம் இன்று வெளியாகியுள்ள ட்ரெய்லரிலேயே பல படுக்கையறை காட்சிகளும், இரட்டை அர்த்த வார்த்தைகளும் இருப்பது தான்.
ஓவியா வெளிப்படையாக பேசக்கூடியவர், குழந்தைதனம் கொண்டவர் என்பதால் தான் பலர் அவருக்கு ரசிகர்களாக மாறி ஓவியா ஆர்மியெல்லாம் துவங்கினர். ஆனால் இன்று வெளியாகியுள்ள 90ml ட்ரெய்லரை பார்த்த சிலர், ஓவியாவின் ரசிகன் என்று சொல்வதற்கு நா கூசுகிறது என்று புலம்புகின்றனர். வெளிப்படையாக இருக்கலாம் ஆனால் இவ்வளவு வெளிப்படையாக இருக்கலாமா என கதறுகின்றனர்.
ஓவியாவை மட்டுமல்ல, இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நடிகர் சிம்புவையும் நெட்டிசன்கள் விட்டுவைக்கவில்லை. உனக்கு இதெல்லாம் தேவையா என கடிந்து கொட்ட துவங்கிவிட்டனர்.
இதிலும் ஒரு சிலர் இன்னும் ஓவியாவை விட்டுக் கொடுப்பதாயில்லை. இந்த மாதிரி படங்களில் நடிக்க ஒரு துணிச்சல் வேண்டும். அது எங்கள் ஓவியாவால் மட்டுமே முடியும் என தலையில் தூக்கி வைக்க துவங்கிவிட்டனர். மேலும் சில ரசிகர்கள் இந்த படத்தை ஆதரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.