பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வணங்கான் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு: டப்பிங் பணிகள் தொடக்கம்.!
இயக்குனர் பாலா இயக்கத்தில், பி ஹவுஸ் மற்றும் வி ஹவுஸ் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில், குருதேவ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்கான்.
இப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமிடப்பட்ட நிலையில், படப்பிடிப்புகள் தொடங்கி பின்னாளில் அவை நின்றுபோனது. இதனையடுத்து, கதைக்குள் அருண் விஜய் நாயகனாக களமிறக்கப்பட்டார்.
வணங்கான் படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின் ஆகியோரும் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. இதுதொடர்பான பூஜை படத்தயாரிப்பு குழு சார்பில் ஏற்படுத்தப்பட்டு, புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.