மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது போதும்டா.. தங்கமகன் தனுஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முக்கிய பிரபலம்! அடேங்கப்பா.. என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் அவர் பாலிவுட், ஹாலிவுட் என பல சினிமாக்களிலும் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ்க்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் இன்று தனுஷ் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு அவரது 43 வது படமான மாறன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா நடிகர் தனுஷ்க்கு வாழ்த்துக் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"தங்க மகன்" தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.@dhanushkraja#HappyBirthdayDhansuh
— Bharathiraja (@offBharathiraja) July 28, 2021
அன்புடன்
பாரதிராஜா pic.twitter.com/UGh6fhkEzl
அதில் அவர், திரையில் தோன்றும் ஒரு சில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுறவி நம் உணர்வோடு, உறவோடு பின்னப்பட்டதாய் அமைந்துவிடும். ஆனால் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குணநலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்து விடுவதுண்டு.
நிஜ வாழ்க்கையில் எப்படியோ.. அதை திரையிலும் பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே.. அதில் உன்னை நான் முதன்மையானவனாக பார்க்கிறேன். எளிமை, தன்னடக்கம், விருதுகள் வென்று குவித்தாலும் 'நான்' என்கின்ற அகந்தை அற்ற பணிவு, சிறந்த கலை, தொழில் நுட்ப அறிவு இது போதும்டா… இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக்கதவைத் தட்டும். பேரன்புமிக்க தங்கமகன் தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.