மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேரளத்து கதகளி ஆடணும் போல் இருக்குது.. காதல் ரசத்தை பொழிந்து, கண்ணீரை வரவழைத்த இயக்குனர் சேரனுக்கு இன்று குவா., குவா., டே..!
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்தவர் நடிகர் மற்றும் இயக்குனர் சேரன். இவர் கடந்த 1970 ஆம் வருடம் டிசம்பர் 12 ஆம் தேதி பாண்டியன் - கமலா தம்பதியினருக்கு, மதுரை அருகேயுள்ள பழையூர்பட்டியில் மகனாக பிறந்தார். சேரனின் தந்தை பாண்டியன் வெள்ளலூர் நாடு திரையரங்கில் ஆபரேட்டராக பணியாற்றினார். தாயார் கமலா பள்ளி ஆசிரியை ஆவார்.
பின்னாளில் சென்னை வந்த சேரன், சில படங்களில் ப்ரொடக்சன் மேனேஜராக பணியாற்றி வந்த நிலையில், இயக்குனர் கே.எஸ் ரவிகுமாரிடம் புரியாத புதிர் படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருந்தார். கடந்த 1992 ஆம் வருடம் சேரன் பாண்டியன் மற்றும் நாட்டாமை படத்தில் அசோசியேட் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1997 ஆம் வருடம் பாரதி கண்ணம்மா படத்தின் இயக்குனராக களமிறங்கிய நிலையில், பின்னர் வெளியான போர்க்களம் திரைப்படம் மூலமாக, சிறந்த இயக்குனர் விருதையும் பெற்றார். சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, ராமன் தேடிய சீதை போன்று நினைவில் இருந்து நீங்காத பல காதல் படங்களையும் கொடுத்துள்ளார்.
செல்வராணி என்ற பெண்மணியை திருமணம் செய்த சேரனுக்கு, நிவேதா பிரியதர்ஷினி மற்றும் தமனி என்ற 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். தொடக்க காலத்தில் பள்ளிப்பருவ காதலை அடையாளப்படுத்தி வந்த சேரன், பின்னாளில் அவரது வீட்டில் நடந்த பிரச்சனை காரணமாக மிகவும் வருத்தப்பட்டு பேசியிருந்தார்.
தற்போது, பெண்களுக்கு எதிரான அநீதிகளை களைய தேவையான கருத்தரங்கு கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்துகொண்டு இருந்தார்.