53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
இயக்குனர் சேரன் வீட்டில் நேர்ந்த திடீர் துயரம்.! ஆறுதல் கூறும் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் சேரன். இவர் இயக்குனராக மட்டுமின்றி சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் உள்ளார்.
இதுமட்டுமின்றி சேரன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். 91 நாட்கள் வீட்டில் இருந்த அவர் இறுதிவரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எலிமினேட் ஆனார். இயக்குனர் சேரன் தற்போது வெப் தொடர் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் சேரனின் 84 வயது நிறைந்த தந்தை எஸ்.பாண்டியன் அவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார். பாண்டியன் அவர்கள் தியேட்டரில் ஆபரேட்டராக பணியாற்றியவர். தனது சொந்த ஊரான பழையூர்பட்டியிலேயே அவர் வசித்து வந்துள்ளார். மேலும் அங்கேயே காலமான அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறதாம். இந்நிலையில் தந்தையின் மறைவால் சோகத்தில் மூழ்கியிருக்கும் சேரனுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.