மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி விஜயை இயக்கும் எச். வினோத்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியவர் எச். வினோத். இவர் கமல் ஹாசனின் 233 வது படத்தையும் இயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, இவரின் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய், எச். வினோத்துடன் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் தயாராகும் படத்தை, கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளது.
இந்நிறுவனம் தற்போது கேஜிஎப் புகழ் யாஷின் டாக்சிக் படத்தை தயாரித்து வழங்குகிறது. அதனைத்தொடர்ந்து எச். வினோத் - விஜய் (தளபதி 69) படத்தை தயாரிக்கிறது என கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கலாம் எனவும், 2025 ல் படம் ரிலீசாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.