என்ன ஆச்சு..? இயக்குநர் ஹரி மருத்துவமனையில் திடீர் அனுமதி..



director-hari-admitted-in-hospital

பிரபல தமிழ் இயக்குனர் ஹரி அவர்கள் கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கியவர் நடிகர் ஹரி. இவரது இயக்கத்தில் உருவான ஆறு, சிங்கம், சாமி போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. தற்போது நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் ஹரி இயக்கி வருகிறார்.

Director hari

இந்நிலையில் இயக்குனர் ஹரியுடன் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது கடும் காய்ச்சல் காரணமாக இயக்குனர் ஹரி பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.