தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இயக்குனர் மகேந்திரனின் மிகப்பெரிய ஆசை; நிறைவேறாத கடைசி ஆசையாக மாறிய சோகம்.!
பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வயது 79 வயது நிரம்பிய மகேந்திரன் சிகிச்சை பலனின்றி காலமானார்.
1978-ம் ஆண்டு வெளிவந்த "முள்ளும் மலரும்" படம் மூலம் அறிமுகம் ஆனவர் இயக்குநர் மகேந்திரன். இதனையடுத்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை போன்ற பிரபல தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர் இயக்குநர் மகேந்திரன்.
1980ல் இவா் இயக்கிய நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற ஒரே படத்தின் மூலம் 3 தேசிய விருதுகளை பெற்றிருந்தாா். இந்நிலையில், அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்குவதே அவரின் மிகப்பெரிய ஆசையாக இருந்ததாகவும், அதற்கான கதை குறித்தும் இணையதளத்தில் வெளியானது.
பேஸ்கட் பால் சம்பந்தப்பட்ட கதையில் அஜித்தை இயக்க வேண்டும் என்பதே அந்த கதை என கூறப்படுகிறது. ஆனால் அவரின் ஆசை கடைசி வரை நிறைவேறாமலே அவர் மரணித்து போனது திரை உலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.