மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இயக்குனர் மணிரத்னத்திற்கு இணைய வழியில் இன்று பாரத் அஷ்மிதா விருது வழங்கல்.!
18 ஆண்டுகளாக எம்ஐடி குழுமம் நாட்டிற்கு முக்கியப் பங்காற்றிய மற்றும் இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்த நபர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது இயக்குனர் மணிரத்னத்திற்கு விருது வழங்கவுள்ளது.
தமிழ் சினிமாவில் பகல் நிலவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் மணிரத்னம். அதனை தொடர்ந்து மௌன ராகம், நாயகன், தளபதி, ராவணன், ரோஜா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் புனேவில் அமைந்துள்ள இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனமான எம் ஐ டி உலக அமைதி பல்கலைகழகம் இந்தியாவின் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கும் நபர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.அந்த வகையில் தற்போது திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை நிகழ்த்தியதற்காக இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு இணைய வழியில் பாரத் அஷ்மிதா விருதினை இன்று வழங்குகிறது.