#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனி ஒருவன் 2 எப்பொழுது? செம மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குனர்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான திரைப்படம் தனிஒருவன். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். மேலும் ஸ்மார்ட் வில்லனாக அரவிந்த் சாமி மற்றும் ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது மேலும் வசூல் சாதனையும் குவித்தது. இந்த படம் வெளியாகி நேற்றுடன் 5 ஆண்டுகள் ஆன நிலையில் பல பிரபலங்களும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஹரிஷ் உத்தமன், தனி ஒருவன் படத்தை குறிப்பிட்டு, எனது திரைப்பயணத்தில் ஒரு மைல் கல். என்னை இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி என கூறி ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி கூறியிருந்தார். மேலும் தனி ஒருவன் 2 படம் குறித்தும் கேட்டிருந்தார்.
இதற்கு தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் மோகன் ராஜா பதிலளித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
It’s my pleasure @harishuthaman And the answer for you and the fans of #ThaniOruvan - Update on #ThaniOruvan2 very soon 👍 https://t.co/Vlc2kXnVBC
— Mohan Raja (@jayam_mohanraja) August 28, 2020