மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல.! பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல்!!
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, எந்த திரைப்பின்னணியும் இல்லாமல் தனது திறமையால், கடின உழைப்பால் முன்னேறி தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாபெரும் வரவேற்பு இருக்கும்.
அவர் இறுதியாக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த டான் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் பிரபல தெலுங்கு டைரக்டர் அனுதீப் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு முன்னேறிய சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபாரமானது. அவர் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே முன்னேறியதால் அது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் பல வழிகளில் அவருக்கு பிரச்சனைகளை கொடுத்தனர்.
பாலிவுட் சினிமாவில் சுஷாந்த்துக்கு நடந்த மாதிரியே சிவகார்த்திகேயனுக்கும் கொடுமைகள் நடந்தது. ஆனால் அவர் படித்தவர், விவரமானவர் என்பதால் சாமர்த்தியமாக கையாண்டுள்ளார். வேறு எந்த நடிகருக்கும் அவ்வளவு கொடுமைகள் நடந்ததில்லை என கூறியுள்ளார்.