மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உண்மையிலே காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் இதுதான்.! ரிஷப் ஷெட்டி சொன்ன ரகசியம்.! செம சர்பிரைசில் ரசிகர்கள்!!
கன்னடத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். அப்படம் செப்டம்பர் 30-ம் தேதி கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. ஆனால் படம் விமர்சன ரீதியாக மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, வசூலை குவித்ததால், படத்தை பிற மொழிகளிலும் வெளியிடப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் காந்தாரா படம் வெளியிடப்பட்டது
மிக குறைந்த பட்ஜெட் ரூ.16 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரிஷப் கூறுகையில், காந்தாராவிற்கு கிடைத்த வரவேற்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். தெய்வத்தின் ஆசியுடன் இப்படம் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது.
இந்நிலையில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிக்க விரும்புகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் பார்த்ததுதான் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகம் அடுத்த ஆண்டு வரும். வரலாற்றில் காந்தாரா படத்தின் கதைக்கு ஆழம் அதிகமாக இருப்பதால் இந்த யோசனை தோன்றியது.
கதைக்கான பணி நடந்து கொண்டிருப்பதால் இதுகுறித்த விவரங்களை பின்னர் வெளியிடுகிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் காந்தாரா இரண்டாம் பாகம் மிகவும் பிரமாண்டமாக 3000கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.