மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜயகாந்த் மறைவு: மனமுருக உருகி நெகிழ்ச்சி ட்விட் பதிவு செய்த இயக்குனர் சிறுத்தை சிவா.!
மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடல், தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்த பலரும் நேரில் வந்திருந்தனர். ஆயினும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கருதி, காவல் துறையினர் முக்கிய பிரமுகர்களை மட்டுமே தேமுதிக அலுவலகத்தில் அனுமதி செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்கு மேல் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த நடிகர் விஜயகாந்த் தமிழ் திரைத்துறைக்காக செய்த நன்மைகள் ஏராளம் என்பதால், பல திரையுலக பிரமுகர்களும் கண்ணீர் மல்க நேரில் வந்து தங்களின் அஞ்சலியை பதிவு செய்தனர்.
இந்நிலையில், இயக்குனர் சிறுத்தை சிவா தனது ட்விட்டர் பக்கத்தில், விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குனர் சிவா தற்போது கங்குவா படப்பிடிப்பில் ஈடுபட்டு இருப்பதால், அவரால் நேரில் வர இயலவில்லை. இதனால் தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவரின் பதிவில், "கேப்டன் அவர்களே.. நீங்கள் மிகப்பெரிய மனிதர். உங்களை முதல் முறையாக பார்த்தபோது, நீங்கள் எண்களின் மீது பொழிந்த கருணை மற்றும் அன்புக்காக உங்களை கூடுதலாக நேசித்தோம். நீங்கள் கூறிய வார்த்தைகள் தைரியம் கொடுப்பவை, கனிவானவை. எங்களின் அனைத்து எண்ணத்திலும் என்றென்றும் வாழும் கேப்டன்" என கூறியுள்ளார்.
CAPTAIN 🙏🙏 great great person 🙏love you for the kindness and love you showered over us all 🙏🙏remembering the first time I saw you , the words you spoke 🙏you are brave , kind ,inspiring 🙏you will be living in all our thoughts eternally 🙏🙏CAPTAIN
— siva+director (@directorsiva) December 29, 2023