பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இறப்பதற்கு முன் என்னிடம் சௌந்தர்யா கூறிய கடைசி ரகசியம் இதுதான்.! கண்ணீர் விட்டு அழுத பிரபல இயக்குனர்!!
தமிழ்சினிமாவில் கார்த்திக்குடன் இணைந்து பொன்னுமணி எனும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சவுந்தர்யா. அப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல், சிரஞ்சீவி, மம்முட்டி என பல முன்னணி சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
மேலும் ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த அவர் 2004 ஆம் ஆண்டு பாஜக பிரச்சாரத்திற்காக சென்றபோது ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இழப்பால் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பெரிதும் சோகத்தில் மூழ்கினர்.
இந்நிலையில் தற்பொழுது நடிகை சௌந்தர்யா குறித்து அவரை பொன்னுமணி படத்தின் மூலம் அறிமுகம் செய்த இயக்குனர் உதயகுமார், தண்டகம் என்ற படத்தின் ஆடியோ விழா வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். அப்பொழுது அவர் பொன்னுமணி படத்தில் நான்தான் அவரை அறிமுகம் செய்தேன். அவர் எப்பொழுதும் என்னை பாசமாக அண்ணா என்றுதான் அழைப்பார் நானும் அவரை ஒரு தங்கையாகவே நினைத்தேன்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமான அவர், ஒருநாள் என்னை அழைத்து தான் உங்களிடம் ஒரு ரகசியம் சொல்லப்போகிறேன். இனிமேல் நான் படத்தில் நடிக்க போவதில்லை. நான் தற்போது இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளேன் என மகிழ்ச்சியாக நீண்ட நேரம் பேசினார். இந்நிலையில் மறுநாள் ஹெலிகாப்டர் விபத்தில் சௌந்தர்யா உயிரிழந்த செய்தி கேட்டு நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன் என கண்கலங்க கூறியுள்ளார்.