பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தமிழகத்தில் படப்பிடிப்பு துவங்கப்படுமா..! முதல்வரிடம் முன்னனி இயக்குனர்கள் மனு
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஆனால் ஒருசில தொழில்கள் தவிர மற்றவைகளுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திரைப்பட படப்பிடிப்புகளுக்கும் திரையரங்கிற்கும் தடை நீடித்து வருகிறது. இதனால் பல திரைப்படங்கள் திரையிடப்படாமலும் சில படங்களின் படப்பிடிப்புகளும் பாதியில் தடைப்படுள்ளன.
இந்நிலையில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த அனுமதி வேண்டி நேற்று திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
சென்னை, முகாம் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர்கள் திரு.பாரதிராஜா அவர்கள் மற்றும் திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்து, திரைப்பட படப்பிடிப்பு நடத்திட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து மனு அளித்தனர். pic.twitter.com/BkP3wyYz7Q
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 30, 2020
இது ஒருபுறம் இருக்க கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையாததால் பிரபல நட்சத்திரங்கள் படப்பிடிப்புகளுக்கு நிச்சயம் வரமாட்டார்கள் என்பது போல தான் தெரிகிறது. ஆனால் புதுமுகங்கள் இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்த முயல்வர்.