மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வசூலில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் டான்! எவ்வளவு தெரியுமா? கொண்டாடும் ரசிகர்கள்!!
நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் கூட்டணியில் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் டான். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.மேலும் பால சரவணன், சிவாங்கி, மிர்ச்சி விஜய், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் படம் வெளியான முதலே நல்ல விமர்சனத்தையே பெற்று வருகிறது. உலகம் முழுவதும் வெளியான இப்படம் 10 நாட்களில் 78 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் 100 கோடிக்கு வசூல் ஈட்டி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு டாக்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது