மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மிஸ் பண்ணிடாதீங்க.! சிவகார்த்திகேயனின் ப்ரைவேட் பார்ட்டி! அதுவும் எப்போ தெரியுமா??
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் டான். இப்படத்தை அட்லீயிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, பாலசரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் மே 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
டான் படத்தில் இடம்பெற்றுள்ள இரு பாடல்கள் ஏற்கனவே வெளிவந்த நிலையில் தற்போது மூன்றாவது பாடல் பிரைவேட் பார்ட்டி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி பாடியுள்ளனர். இந்த காம்போ டாக்டர் படத்தில் செல்லம்மா பாடலையும், பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து பாடலையும் கொடுத்துள்ளார்கள். அதனால் இந்தப் பாடலிற்கும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.