மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது! நடிகை வனிதாவிற்கு டொனல்டு டிரம்ப் பரிசு அனுப்பியுள்ளாரா?? வைரலாகும் சர்ச்சை புகைப்படம்! விளாசும் ரசிகர்கள்!
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் நெட்டிசன்களால் மோசமாக விமர்சனம் செய்யப்பட்டு சமூகவலைத்தளங்களில் பேசுபொருளானார்.
ஆனால் எதற்கும் அசராமல் தன்னை குறித்து தவறாக பேசும் அனைவருக்கும் வனிதா அசராமல் பதிலளித்து வருகிறார். மேலும் சமையலுக்கான யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் வனிதா பரிசுபொருளின் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் டியர் வனிதா மற்றும் பீட்டர் பால் எங்களின் வீழும் பொருளாதாரத்திற்கு உதவிய உங்களுக்கு அமெரிக்காவிடமிருந்து ஒரு பரிசு, டொனால்ட் டிரம்ப் என எழுதப்பட்டிருந்தது. மேலும் அதன் கீழே இது சீனாவிலிருந்து உருவாக்கப்பட்டது. இதனை பயன்படுத்துவதற்கு முன்பு சுத்தப்படுத்தி விடுங்கள் எனவும் எழுதப்பட்டிருந்தது. இதனைக்கண்ட ரசிகர்கள் பலரும் ஷாக்காகி, அது போலியானது என்று செய்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.