மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமல் 234 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டாரின் மகன்! போஸ்டருடன் வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து உலகநாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்த வருகிறார். இவர் ஹெச். வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படம் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக உள்ளார். நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம்- கமல் கூட்டணி மீண்டும் இணைகிறது.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து கமல்ஹாசன் 234 படத்தை தயாரிக்கின்றது. இப்படத்தின் தலைப்பு இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பட குழுவினர் போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். முதலில் கமல்ஹாசனின் மிரட்டலான போஸ்டர் வெளியானது. மேலும் மலையாள பிரபல நடிகரும், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனுமான துல்கர் சல்மானும் இந்த படத்தில் நடித்துள்ளதாக போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Excited to collaborate with @dulQuer on this epic journey...#TitleAnnouncementToday5pm#Ulaganayagan #KamalHaasan #HBDUlaganayagan #HBDKamalSir@ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTM… pic.twitter.com/A2mlRiXcy9
— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2023