"உங்களையும், குடும்பத்தையும் பாருங்க, சண்டை போடாதீங்க" - தல அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை.!
எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்துவின் கேவலமான செயல்.?! நெட்டிசன்கள் கலாய்.?!
கோலிவுட் திரையுலகில் திரைப்பட இயக்குனரும், துணை நடிகருமாக இருந்தவர் மாரிமுத்து 2008 ஆம் வருடம் 'கண்ணும் கண்ணும்' என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்பு புலிவால் என்ற படத்தை இயக்கினார். இந்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தராததால், இதன் பின்பு துணை நடிகராக படங்களில் நடித்து வந்தார்.
மாரிமுத்து நடித்த படங்களான வாலி, முத்து, யுத்தம் செய், ஆரோகணம், நிமிர்ந்து நில், குற்றமே தண்டனை, பரியேறும் பெருமாள் போன்ற பல வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார். மேலும், சங்கரின் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பு திறமையின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடரில் நடிகர் மாரிமுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் ஆணாதிக்கவாதியாக நடித்திருக்கும் மாரிமுத்து பல பேட்டிகளிலும் தன்னை அவ்வாறே காட்டிக் கொண்டுள்ளார். எதிர்நீச்சல் தொடரில் இவர் நடித்திருப்பதையும், இவரின் பேட்டிகளையும் கண்டு அவ்வப்போது நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.
இத்தகைய நிலைமையில், ட்விட்டரில் ஆபாச பக்கம் ஒன்றில் ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு 'கால் மீ ' என்று பதிவு வெளியாகி இருந்தது. இந்த பதிவில் நடிகர் மாரிமுத்து அவரின் மொபைல் நம்பரை பதிவு செய்திருக்கிறார். இதை இவரின் ஒரிஜினல் ட்விட்டர் பக்கமா அல்லது போலி கணக்கா என்பது தெரியவில்லை. இந்தப் பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த ட்விட்டர் வாசிகள் இணையத்தில் மாரிமுத்துவை கலாய்த்து வைரலாக்கி வருகின்றனர்.