மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விபத்தை ஏற்படுத்திய எதிர்நீச்சல் சீரியல் நடிகை.! படுகாயமடைந்த போலீசார்! பரபரக்கும் விசாரணை!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் எதிர்நீச்சல். இந்த தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் முக்கிய ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர் நடிகை மதுமிதா. அவர் இதற்கு முன்பு கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடரின் மூலம் செம்ம ஹிட்டான அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் அண்மையில் நடிகை மதுமிதா சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் தனது ஆண் நண்பரோடு காரில் சென்ற போது எதிரே வந்த போலீசாரின் வாகனத்தில் மோதியதில், போலீசார் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.
மேலும் நடிகை மதுமிதா ராங் ரூட்டில் சென்றதாகவும், அவர் ஆண் நண்பருடன் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணையில் நடிகை மதுமிதா தங்கள் மீது தவறில்லை, போலீஸ்காரர்தான் வேகமாக வந்து மோதிவிட்டார் என கூறியுள்ளார். மேலும் காவல்துறையினர் மதுமிதா மற்றும் அவரது நண்பரை ஸ்டேஷனுக்கு வரவழைத்து காரை பறிமுதல் செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.