"மோசடி வழக்கில் சிக்கிய பிரகாஷ்ராஜ்.. அமலாக்கத்துறை சம்மன்!"



Enforcement Directorate filled case against prakash raj

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மற்றும் மராத்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

actor

கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த இவர், தமிழில் எதிர்மறைக் காதாப்பாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். 2019ம் ஆண்டு பெங்களூருவில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தார்.

தமிழில் தோனி, அபியும் நானும், காஞ்சீவரம், சிங்கம், சந்தோஷ் சுப்பிரமணியம், பாரிஜாதம், வானம், பரமசிவன், சகுனி, பொன்னர் சங்கர், தீராத விளையாட்டுப்பிள்ளை, லிட்டில் ஜான், டூயட், நிலா, ஆதி, அள்ளித்தந்த வானம், ரோஜாக்கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

actor

இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த பிரணவ் ஜுவெல்லரி கடைகளில் நடந்த சோதனையில் 11.60கோடி தங்கமும், 23.70லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.