#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திரையுலகில் தொடரும் மரணம்.. மாரடைப்பால் மேலும் ஒரு பிரபல நடிகர் காலமானார்.!
தற்போது வயது வித்தியாசமின்றி, சிறியவர்கள், குழந்தைகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் முதற்கொண்டு வயதானவர்கள் வரை மாரடைப்பால் மரணமடைந்து வருகின்றனர். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போதே மாரடைப்பு வந்து இறப்பதும் சமீபத்தில் நிகழ்ந்தது.
சமீபத்தில் தான் தமிழ் நடிகர்கள் ஆர்.எஸ் சிவாஜியும், நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து ஆகியோர் மாரடைப்பால் மரணமடைந்தனர். இதையடுத்து தற்போது, பிரபல பாலிவுட் நடிகர் சதீந்தர் குமார் கோஸ்லா மாரடைப்பால் காலமானார்.
84 வயாதாகும் சதீந்தர் குமார் கோஸ்லா, மும்பையின் கோகிலா பென் மருத்துவமனையில், நேற்று மாலை மாரடைப்பால் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 500 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் சதீந்தர் குமார் கோஸ்லா .
அமிதாப் பச்சன் நடித்த 'ஷோலே' படத்தில் சிறைக்கைதியாக நடித்து, அனைவராலும் பாராட்டப்பட்டார் சதீந்தர் குமார் கோஸ்லா. இந்நிலையில் இவரது மரணம் ஹிந்தி திரையுலகில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் சதீந்தர் குமார் கோஸ்லாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.