#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வடிவேலுவோட வெற்றிக்கு காரணமே நாங்கதான்., அவரு ஒன்னும் தானா ஜெயிக்கல - உண்மையை உடைத்த பிரபல காமெடி நடிகர்..!!
தமிழ் திரையுலகில் தனது உடல் அசைவு, முகப்பாவை போன்றவற்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை காமெடியில் ஒரு தனி நட்சத்திரமாக ஜொலித்து வந்தவர் வடிவேலு.
இவர் அரசியல் ரீதியான பயணத்திற்கு சென்று தெரிவித்த எதிர்மறை கருத்துக்களால் அவரது திரை வாழ்க்கையை இழந்தார். அதேபோல அவருடன் நடித்த பல நடிகர்கள், வடிவேலு சக நடிகர்களை மதிப்பதில்லை என்று கூறி வந்தனர்.
மேலும், தனது காட்சிகளையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக, பல கண்டிப்புடன் நடந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், பிரபல காமெடி நடிகரான சிசர் மனோகர் பல ஆண்டுகளாக விவேக் மற்றும் வடிவேலு ஆகியோருடன் பல காமெடி காட்சிகளில் தோன்றியிருக்கிறார்.
அவர் வடிவேலு குறித்து கூறுகையில், "வடிவேலு காமெடி விஷயத்தில் இவ்வளவு உயர்ந்தது அவரது தனிப்பட்ட வெற்றி கிடையாது. அதனை சுற்றி இருந்த நான், போண்டாமணி போன்ற சக நடிகர்கள் தான்.
அவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் ஓடவில்லை. அவர் மட்டும் நடித்ததால் தான் அந்த படம் ஓடவில்லை. ஏனெனில் அவரது வெற்றிக்கு காரணம் நாங்கள்தான்" என்று தெரிவித்துள்ளார்.