#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சைக்கிளிலேயே 2 நாட்கள், 300 கிமீ பயணம்.. ஏன் இதெல்லாம்! பாசத்தால் கண்கலங்க வைத்த தந்தை!! நெகிழ்ச்சி சம்பவம்!!
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே டி.நரசிபுரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். கூலி தொழிலாளியான இவரது 10 வயது மகன் நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் அவதிபட்டு வருகிறார். இதற்கு மைசூரில் சிகிச்சை பெற்றும் பலனளிக்காத நிலையில், அவர் 2 மாதங்களுக்கு ஒருமுறை தனது மகனை பெங்களூருவில் உள்ள நிம்ஹன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது கொரோனா பரவலால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டதால் ஆனந்த் மாத்திரை வாங்க கூட பெங்களூரு செல்லமுடியாமல் மிகவும் தவித்து வந்துள்ளார். மேலும் அவரது மகன் ஒருநாள் கூட தவறாமல் மாத்திரையை எடுத்துக் கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில் மருந்துகள் முடியவிருந்ததால் அதனை வாங்க அவர் சைக்கிளிலேயே பெங்களூருக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் போலீசாருக்கு பயந்து அவர் யாரும் பெரிதும் பயன்படுத்தாத கனகபுரா பாதை வழியாக 2 நாட்கள் பயணம் மேற்கொண்டு பெங்களூர் சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்ததும் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அவரது மகனுக்கு தேவையான மருந்துகளையும், பின்னர் வழி செலவிற்கு ஆயிரம் ரூபாயையும் கொடுத்து அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து மீண்டும் தனது பயணத்தை தொடங்கிய ஆனந்த் இரு நாட்களுக்கு பிறகு வீடு வந்து சேர்ந்துள்ளார்.
300 கிலோ சைக்கிளிலேயே பயணம் செய்து தனது மகனுக்கு மாத்திரை வாங்கி வந்த தந்தையின் பாசம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.