திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடக்கொடுமையே.! ரத்தம் சொட்ட சொட்ட இரு முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் செய்த காரியம்.! பதைபதைக்க வைக்கும் வீடியோ!!
தமிழ் சினிமா மட்டுமின்றி அனைத்து மொழி சினிமாக்களிலும் ஹீரோக்களை உயிராக, தங்களது உறவாக கருதி அவர்களை கொண்டாடும் ரசிகர்கள் ஏராளம். தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் திருவிழாக்களை போல கொண்டாடுவர். இதற்கிடையில் பல முன்னணி நடிகர்களின் ரசிகர்களுக்கு மத்தியில் சமூக வலைதளங்களில் மோதல்கள் ஏற்படுவதும், பிடிக்காத நடிகர்களை மோசமாக விமர்சிப்பதும் அதிகளவில் உள்ளது.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் காரசாரமான மோதல்கள் நடைபெற்றுள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி ஆந்திராவில் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு இடையே பயங்கரமான அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வாய் தகராறு பிரச்சனையில் ஆரம்பித்து பின் பிரபாஸ் ரசிகர் ஒருவரை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கும்பலாக சேர்ந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும் ஜெய் அல்லு அர்ஜுன் என சொல்ல சொல்லி தொடர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அந்த நபரின் சட்டை கிழிந்து, தலை மற்றும் உடம்பெல்லாம் ரத்தம் சொட்டியுள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. மேலும் இதைக் கண்டு இளைஞர்களின் எதிர்காலம் எதை நோக்கி செல்கிறது? இதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் கண்டிப்பு தெரிவிப்பாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
. @BlrCityPolice you should take action on this kind of people, just for online far wars this is not acceptable, kindly take proper action. pic.twitter.com/kfn4GlxmiO
— Bhairava J3👦 (@Jack_JackParr) March 10, 2024