மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திணற வைக்கும் ரொமான்டிக் புகைப்படங்கள்.! பிரபல நடிகையுடன் தனது காதலை உறுதி செய்த கௌதம் கார்த்தி.!
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில்
கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை மஞ்சிமா மோகன். முதல் படத்திலேயே இவர் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து அவர் தேவராட்டம், சத்ரியன், களத்தில் சந்திப்போம், இப்படை வெல்லும், எப்.ஐ.ஆர்.
என பல படங்களில் நடித்துள்ளார்.
அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களிலும் நடித்துள்ளார். தேவராட்டம் படத்தில் நடித்தபோது மஞ்சிமா மோகன் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த கார்த்திக்கின் மகனும், நடிகருமான கௌதம் கார்த்திக்கிடையே காதல் மலர்ந்து இருவரும் இரு ஆண்டுகளாக காதலித்து வருவதாக தகவல்கள் தீயாய் பரவி வந்தது.
ஆனால் இதுகுறித்து அவர்கள் இருவரும் எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகனுடன் இருக்கும் ரொமான்டிக்கான கியூட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, தனது காதலை நீண்ட பதிவுடன் உறுதி செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.